Skip to main content

'விக்கிரவாண்டி இடைத்தேர்தல்'-வீடியோவில் ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலின்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
'Vikravandi by-election' - M.K.Stalin asked for support in the video

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அந்த வீடியோவில் வரும்,  ''விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். ஜூலை 10-ஆம் நாள் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கின்ற சிவ சண்முகத்திற்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற அன்னியூர் சிவா என்கின்ற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மண்ணின் மைந்தர்.  மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா. 1986 ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞரோட உடன்பிறப்புகளில் அவரும் ஒருத்தர். கலைஞருடைய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கின்ற ரத்த நாளங்களில் ஒருத்தர்''  என தெரிவித்துள்ளார்.z

சார்ந்த செய்திகள்

 

Next Story

'திக்கற்ற காட்டில் நின்றபோது கை கொடுத்துத் தூக்கிவிட்டவர் கலைஞர்' - திருமாவளவன் பேச்சு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Thirumavalavan

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள நேமூர் என்ற இடத்தில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மூர்த்தி ஆகியோருடன் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது திருமாவளவன் பேசுகையில், 'திக்கற்ற காட்டில் விட்டதைப் போல் அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் நாம் நின்று கொண்டிருந்த பொழுது நமக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்தியவர் கலைஞர். அதிமுக அப்பொழுது நம்மை கண்டு கொள்ளவில்லை. ஒப்பந்தம் முறிந்து போனது. சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா அம்மையார் உடன்படவில்லை. நானும் ரவிக்குமாரும் போயஸ் தோட்டத்திற்கு போய் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து விரக்தியில் வெளியேறிய நிலையில் அந்த தகவலை அறிந்த கலைஞர் தொலைப்பேசியில் என்னை அழைத்து அரவணைத்துக் கொண்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 8 சதவீத ஓட்டு வாங்கி காட்டிய பிறகுதான் அதிமுக கூட்டணியில் சேர முடிந்தது. விடுதலை சிறுத்தைகள் அப்படி தனித்துப் போட்டியிடவில்லை; எத்தனை சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவில்லை; தமிழ்நாடு முழுக்க நாம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை ஆனாலும் கலைஞர் 2009-இல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை கொடுத்தார். இரண்டு நாடாளுமன்றத் தொகுதி என்பது 12 தொகுதிகள். இதெல்லாம் சாதாரணமான ஒரு முடிவல்ல. இதெல்லாம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிடையாது. எல்லோரும் தனது சொந்தக் காலில் நின்று குட்டிக்கரணம் போட்டு சாதித்து காட்டிய பிறகுதான் இந்த 20, 30 ஆண்டுகளில் கூட்டணியிலேயே சேர முடிந்தது. அது மட்டுமில்லாமல் நாங்கள் தனிச் சின்னத்தில் நின்று அங்கீகாரம் பெற விரும்புகிறோம் என்று சொன்னபோது அதற்கும் வாழ்த்து சொன்னவர் கலைஞர்'' என்றார்.

Next Story

“இடைத்தேர்தல் முடிந்த உடனே பகுதி நேர ரேஷன் கடைகள் கொண்டுவரப்படும்” - எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில் குமார்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் பகுதியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார்  தீவிரமாக பிரச்சாரம் செய்து வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது சோழாம்பூண்டியைச் சேர்ந்த தொகுதி மக்களை சந்தித்து வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார். 

 Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar

அதன் பின் பொதுமக்கள் மத்தியில் ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, “இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த புகழேந்தி சட்டமன்றதத்தில் உரையாற்றும்போது தனது தொகுதிக்குட்பட்ட சோழனூர், சோழாம்பூண்டி பகுதிக்கு பகுதிநேர ரேஷன்கடை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பின்னர் அவர் காலமானதால் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். திமுக மாநில துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுடன் பிரச்சாரத்திற்கு வந்தபோது இப்பகுதி மக்களிடம் அவர்கள் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு பொதுமக்களின் கோரிக்கையான பகுதிநேர ரேஷன்கடை, பொது கழிப்பறை வசதி, பேருந்து நிழற்குடை வசதி, வேண்டுமென கேட்டுள்ளனர். அவரும் இடைத்தேர்தல் முடிந்த பின்பு நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். 

அவர் வாக்குறுதி அளித்தபடி பகுதி நேர ரேஷன் கடை உட்பட அனைத்து கோரிக்கைகளும் இடைத்தேர்தல் முடிந்தபின்பு உடனடியாக நிறை வேற்றப்படும். அதுபோல் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நூறு நாள் வேலை கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதைத் தொடர்ந்து தான் 400 பேருக்கு 300 ரூபாய் சம்பளத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

 Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar

இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள். நாகராஜன், பிலால் உசேன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன், மாவட்ட துணைச் சேர்மன் விஜயன், திண்டுக்கல் துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன், திண்டுக்கல் பகுதி செயலாளர்களான கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், மேற்கு பகுதி செயலாளர் அக்கு, தெற்கு பகுதி செயலாளர் சந்திர சேகர், கவுன்சிலர் ஜான் பீட்டர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.