
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று (25-03-25) மாரடைப்பால் காலமானார். 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா போன்ற படங்களில் நடிகராக நடித்தார். வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் தனது கதாபாத்திரத்தால், ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். சமீபத்தில், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
மாரடைப்பால் காலமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூர்யா, கார்த்தி, பிரபு உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவருமான விஜய், இன்று (26-03-25) மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு நேரில் சென்று மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினார்.