Published on 12/08/2020 | Edited on 12/08/2020

டெல்லி சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்கு இந்தி தெரியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி இந்தியில் மொழி பெயர்த்தார் என்று சர்ச்சை கருத்தைச் சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு இன்று காட்டமாக திமுக எம்.பி. கனிமொழி பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் டெல்லி சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்கு இந்தி தெரியாது. எந்தப் பொது மேடைகளிலும் நான் மொழி பெயர்ப்பு செய்ததில்லை. நான் படித்தது எல்லாம் தமிழ், ஆங்கிலம் தான். இந்த மொழிகள் மட்டும்தான் எனக்குத் தெரியும். நான் இந்தியை மொழிபெயர்ப்பு செய்தேன் என்று நிரூபிக்க முடியுமா? இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.