தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து அண்மையில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் பரந்தூர் மக்களை சந்தித்திருந்தார்.
கடந்த ஆண்டு பிப்.2 ஆம் தேதி தவெக கட்சியை விஜய் அறிவித்திருந்தார். தவெக கட்சி தொடங்கப்பட்டு இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு கட்சியினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட நிர்வாகிகளை விஜய் பனையூரில் இன்று காலை 10 மணிக்கு சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தவெகவில் மாவட்ட நிர்வாகிகள், நகரத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.