
கூடன்குளத்திற்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்டு அடுத்தடுத்த வழக்குகளில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் முகிலன் இன்று (6.9.2018) மத்திய அரசானது வேதாந்தா, ஓஎன்ஜிசி உடன் செய்து கொள்ள போகும் பெட்ரோலிய உடன்படிக்கைக்கு எதிராக உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
அவரது கோரிக்கைகள்:
1. தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் 6.9.2018 அன்று நடக்கும் பெட்ரோலியம் என்ற பெயரில் மீத்தேன், ஷேல்மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உட்பட அனைத்து திரவ, வாயு வடிவிலான எரிபொருட்களை தமிழகத்தில் 3 வட்டாரம் உட்பட 55 வட்டாரங்களில் எடுக்க அனுமதி வழங்கும் டெண்டரை இந்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் வழங்குவதை தடுத்து நிறுத்து!
2. 8 வழி சாலை அமைக்க கருத்து கேட்க விலக்களிக்கும் சட்டத்தை ரத்து செய்!
3. தமிழகத்திலிருந்து சித்தூர் மாவட்டம் ஆந்திரத்திற்கு வழங்கியதால் பாலிற்றின் குறுக்கே புல்லூரி அருகே அணை, தேவிகுளம் - பீர்மேடு - மூணாறு கேரளத்திற்கு வழங்கியதால் முல்லை பெரியாற்றில் 152 அடி தண்ணீர் தேக்க முடியாமை, 140 அடி மட்டத்தில் பார்கிஸ் அமைப்பு, கச்சத்தீவை இலங்கைக்கு தார்ஐ வார்த்ததால் தமிழக மீனவர்களின் படகை சட்ட விரோதமாக பிடித்து இலங்கை அரசுடைமையாக்கல் என நிகழ்வு. தமிழகத்திடம் இருந்து பறித்த சித்தூர், தேவிகுளம் - பீரமேடு - மூணாறு, கச்சத்தீவு என இழந்த எல்லைகளை மீட்கும் போராட்டத்தை முன்னெடுத்து 1956 ல் குமரி மாவட்டம், 1961 ல் திருத்தணியை மீட்டது போல் மீட்டெடுக்க வேண்டும்.
4. வைகை ஆறு வறண்ட பாலைவனம் போல் பல ஆண்டுகளாக உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தெ.புதுக்கோட்டையில் வழங்கப்பட்ட மாஸ்வொலி அனுமதியை ரத்து செய்து பார்த்திபனூர் மதகு அணையை காப்பாற்று!
5. பாலம் மற்றும் தடுப்பணைகளின் முன்புறம், பின்புறம் சட்டவிரோத மணல் கொள்ஸ்ரீ தொடர்ந்து நடந்துள்ளதால் காவிரி ஆற்றில் உள்ள பாலம், தடுப்பணை பலவீனமடைந்து ஆற்றின் அடிப்பகுதி (foundation) வெளியே தெரிய த்வங்கியுள்க்ஷதை காண முடிகிறது என்றும், அதிகாரிகளின் துணையோடு வரம்புமீறிய, சட்ட விரோத, விதிமீறல் மணல் கொள்ளையால் காவிரிதாயின் உடல் முழுவதும் புண்பட்டு கிடக்கிறது என்றும் அவளது இரத்தம் கசியும் காயங்கள் ஆற சற்று ஓய்வு தேவை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு (வழ.அழகுமணி, வழ. சரவணன், மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தாவரவியல் ரவிச்சந்திரன் ஆகியோஐ கொண்ட குழு) 1.9.2017 முதல் 8.9.2017 வரை கரூர் தோட்டக்குறிச்சியில் இருந்து கும்பகோணம் நல்படுகை வரை 8 நாள் காவிரி, கொள்ஸ்ரீடத்தில் ஆய்வு செய்து 12.9.2017 ல் நீதிமன்றத்தில் அறிக்கை செய்தனர். இந்த அறிக்கையை காலில் போட்டு மிதித்த தமிழக அரசு மணல் கொள்ளையை காவிரி கொள்ளிடத்தில் தொடர்நது நடத்தியதன் விளைவே முக்கொம்பு தடுப்பணை உடைந்ததும் திருச்சி கொள்ளிடம் பாலம் உடைந்ததுமாகும். பொதுப்பணித் துறையை கையில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக அரசு அணை உடைந்ததற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!
6. "விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சிறுபான்மையினர் வலம் வரும் வீதிகளில் அனுமதி மறுக்கப்பட்டால் காவிப்படை காக்கிகளை அடக்கி ஆளும்" என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியாவை மற்றும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியும் வசை சொற்களால் திட்டி கொலை மிரட்டல் கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன் மூது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 7. காந்தியை கொலை செய்தவர்கள் 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ராஜிவ் கொலையை காரணம் காட்டி 7 தமிழர்களை 27 ஆண்டுகளாக சிறையிலு வைத்திருப்பது அதிகமாகும். காந்தி கொலைக்கு ஒரு நீதி ! ராஜிவ் கொலைக்கை ஒரு நீதியா ? ராஜிவ் கைலையில் உள்நாட்டு வெளிநாட்டு சதிவலை பின்னணி புலனாய்வை MDMA எனப்படும் கண்காணிப்பு முகமை இதுவரை செய்து முடிக்கவில்லை. ஜெயின் கமிசன், வர்மா கமிசன் அறிக்கை இதுவரை முடியவில்லை. 7 அப்பாவி தமிழர்களை பலி கொடுத்து ராஜிவ் கொலையின் சதியை இந்திய அரசு மூடிமறைப்பதை இனியும் அனுமதிக்க முடியாதே.
7 தமிழர்களை விடுதலை செய்!
8. பயங்கரவாதம் என்ற பெயரில் "மோடியை கொல்ல சதி" என்று கைது செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் வரவர ராவ், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பெர்னான் கான்சால்வஸ், அருண் பெரைரா, கடியும் நவலா, வழக்கறிஞர் சுதா பரத்வாக் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஸ்டெர்லைட்டை காரணம் காட்டி சிறைப்படுத்தப்பட்டுள்ள மே 17 இயக்க பொறுப்பாளர் தோழர். திருமுருகன், மதுரை திவிக பொறுப்பாளர் மணிகண்டன் என்ற மா.பா.மணியமுதன் ஆகியோரை விடுதலை செய்தும், கனடா கல்லூரி மாணவி தூத்துக்குடியில் நீதி கேட்ட வீரத்தமிழச்சி சோபியா மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
9. வேதாந்தா நிறுவனத்தை தெரிந்தவர்களை தென் ஆப்பிரிக்கா மாரிகானாவில் 2012 ஆகஸ்ட் 16 அன்று 36 பேரை சுட்டு கொல்ல காரணமாக இருந்த வேதாந்தா பொறுப்பாளர், தமிழக ஸ்டெர்லைட் பொறுப்பாளராக நியமித்த பின் அவரை பிரதமர் மோடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கு முன் ஏப்ரலில் லண்டனில் சந்தித்து பேசியதற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
10. சுங்க சாவடிகளில் ஒப்பந்தம் காலாவதியான பின்பும் கட்டணம் வசூலிப்பது ஏன்? கட்டண உயர்வு ஏன்? அரசே உண்மையை வெளியிடு! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.