Skip to main content

திருச்சி விமானநிலையம் பார்வையாளர் பகுதி தீடீர் மூடல்!

Published on 11/08/2018 | Edited on 27/08/2018


திருச்சி விமானநிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்க அதிகாரிகள் துணையோடு மலேசியா, சிங்கப்பூர் பயணிகள் பலர் தங்கம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்து தீடிர் சோதனையில் 19 பேர் மீது வழக்கு பதிந்து சிறையில் தள்ளியது.

தற்போது அவர்களிடம் விசாரணை செய்வதற்காக மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்துள்ளது. பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தீடீர் என திருச்சி விமானநிலையம் பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது என்று தகவல் பரவியதால் அதிர்ச்சியடைந்த நிலையில் என்ன பிரச்சனை என்று விசாரித்ததில்…
 

 

 

சுதந்திரதின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வந்துள்ள எச்சரிக்கையினால் திருச்சி விமானநிலையத்தில் பார்வையாளர்கள் பகுதி மூடப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் ஏற்கனவே முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் மணல் மூட்டையுடன் தடுப்பு பகுதியிலிருந்து கண்காணித்து வருகிறார்கள். விமானநிலையத்திற்கு வரும் கார்பார்க்கிங் மற்றும் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்ய பின்னரே அனுமதிக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்