Skip to main content

ஆற்றில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே ஆற்றல் தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

      

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கனகரத்தினம் மகன்களான தனஷ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அதுபோல் ஜெகதீஷ் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான. அதே பகுதியை சேர்ந்த குழந்தைராஜ் மகனான லூயிஸ்ஆனந்தராஜ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

 Three boys die in river

 

 Three boys die in river

 

 Three boys die in river

இந்த மூன்று சிறுவர்களும் நண்பர்கள் என்பதால் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்களை அழைத்துக்கொண்டு குறிஞ்சிநகர் அருகில் மணியாறு கெஜம் என அழைக்கப்படும் பள்ளத்தாக்கு ஆற்று அருகே விளையாண்டு கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது கிரிக்கெட் பந்து பள்ளத்தாக்கு ஆற்றில் விழுந்தது அதை எடுக்க ஜெகதீஷ் சென்றபோது தவறி ஆற்றில் விழுந்தான். அவனை காப்பாற்ற சென்ற தனஷ் மற்றும் லூயிஸ் ஆனந்தராசும் ஆற்று தண்ணீரில்  சிக்கி மூழ்கினார்கள்.

 

 

அதை கண்டவுடன் விளையாண்டு கொண்டிருந்த மற்ற சிறுவர்கள்  சத்தம் போட்டனர். 

 

 Three boys die in river

 

இந்த விஷயம் போலீசாருக்கும், தீயணைப்புக்கும் தெரியவே  ஸ்பாட்டுக்கு வந்து பள்ளத்தாக்கு தண்ணீரில் சிக்கி இறந்த மூன்று சிறுவர்கள் உடலையும் மீட்டு எடுத்தனர். இது சம்பந்தமாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் கொடைக்கானலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.