Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு! திருவாரூர் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
n

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து  வெளிநடப்பு செய்தனர்.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் இன்று நடைப்பெற்றது. மாவட்டம்  முழுவதில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பகுதியான விவசாயிகள்  " அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்றும், உடனே" திறக்கவேண்டும் " என்றும் கோரிக்கை விடுத்தனர். 

 

அதனை தொடர்ந்து திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்" ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு முன்பு மறைந்த நெல் ஜெயராமனுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.


 

சார்ந்த செய்திகள்