Published on 07/04/2022 | Edited on 07/04/2022

தமிழக ஆளுநர் திடீர் பயணமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். தனிப்பட்ட வேலைகளுக்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்த நிலையில், ஆளுநரின் இந்த பயணம் கவனத்தை ஈர்த்துள்ளது.