Published on 06/06/2020 | Edited on 06/06/2020

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்தில் வரும் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனியறையில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கலாம் என பேரிடர் மேலாண்மைதுறை அரசாணை வெளியிட்டுள்ளது.