Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில்... கஜா புயலின் கோரத்தாண்டவம்! ஹெலிகேம் படங்கள்

Published on 21/11/2018 | Edited on 21/11/2018

 

 

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கடகுளம், முத்துப்பட்டினம், ஆவனத்தான்கோட்டை, கருக்காகுறிச்சி, புதுப்பட்டி, வண்டார்விடுதி போன்ற பகுதிகளில் பல ஏக்கரில் போடப்பட்டிருந்த தென்னை, மா, பலா, தேக்கு, எலும்பிச்சை, வாழை, முந்திரி, பேரிச்சை, கரும்பு போன்ற  மரங்களும், செடிகளும் வேரோடு சாய்ந்து ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு இருக்கிறது.

 

அதோடு வீடுகள், நிறுவனங்கள், கல்லூரி போன்றவைகளின் மேற்கூரைகள் பெரும் சேதமடைந்துள்ளது. இந்த பாதிப்புகளை ஹெலி கேமரா வியூவ் மூலம் படங்கள் எடுக்கப்பட்ட போதுதான் எந்த அளவுக்கு கஜா புயல் கோரத்தாண்டவம்  ஆடி  விளைநிலங்களை அழித்து இருக்கிறது என  பார்க்கமுடிந்தது.

 

இந்த புயல் தாக்குதலால் மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு தொடர்ந்து இருள்சூழ்ந்து வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளிட்டு வருகிறார்கள்.  

 

அதோடு  குடிநீர், வாடகை ஜெனரேட்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.  இந்த கஜா புயலால் சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் அரசு  இயந்திரங்களின் மீட்பு பணிகள் கூட அசுர வேகத்தில் நடக்காமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க இதுவரை முன்வரவில்லை.

 

 

 

 

சார்ந்த செய்திகள்