Skip to main content

நெக்னாமலை கிராமத்திற்கு கழுதை மேல் சென்ற பொங்கல் பரிசுகள்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்டது நெக்னாலை கிராமம். இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டும்மென்றால் இரண்டு மலைகளை ஏறி இறங்க வேண்டும். சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெக்னாமலை என்கிற மலை கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது. இதனால் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை. தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது. இந்த கிராமத்துக்கான நியாய விலைக்கடை அடிவாரத்தில் உள்ளது. அரிசி, மண்ணெண்ணய் எது வாங்க வேண்டும் என்றாலும் அம்மக்கள் அங்கிருந்து இறங்கி வந்து வாங்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், கரும்பு, பணம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. நெக்னாமலை கிராமத்துக்கு சாலை வசதியில்லையென கடந்த மாதம் இறந்த ஒருவரின் உடலை டோலி கட்டி அக்கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு தூக்கி சென்று அடக்கம் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

hj



அந்த கிராமத்துக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் நடந்து சென்று பார்வையிட்டு வந்தவர், அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருகிறேன் என அம்மக்களுக்கு வாக்குறுதி தந்துவிட்டு வந்தார். மலையில் சாலை அமைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பரிசு அக்கிராம மக்கள் கீழே இறங்கி வந்து வாங்குவதற்கு பதில் அதிகாரிகள் பொருட்களை எடுத்துச்சென்று வழங்கினால் நன்றாக இருக்கும், மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என முடிவு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 8ந்தேதி பொது விநியோகத்துறை அலுவலர்கள், அப்பகுதி நியாயவிலைக்கடை ஊழியர், கிராம நிர்வாக அலுவலர் போன்றோர் பொங்கல் பரிசு பொருட்களை மூட்டைகளாக கட்டி கழுதை மேல் ஏற்றி அக்கிராமத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் திருப்பதி ஆகியோர்  கழுதைகள் மீது எடுத்து சென்றனர். அங்கு அக்கிராம மக்களுக்கு வழங்கிவிட்டு பின்னர் மலையில் இருந்து இறங்கவுள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்