Skip to main content

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது- எஸ்.பி. அறிவிப்பு...

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

Muthuramalingam Thevar function

 

ராமநாதபுரம் மாவட்டத்தின் பசும்பொன் நகரில் நாளை முத்துராமலிங்கத் தேவரின் 113வது குரு பூஜை விழா நடக்கிறது. தலைவர்கள் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கூட்டம் விழாவுக்குச் செல்வதில் அதிகமிருப்பதால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் மாவட்ட நிர்வாகத்தால் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதன்படியே அவர்களும் நிகழ்ச்சிகளுக்குக் கடந்த வருடம் வரை சென்று வருவது நடைமுறையாக இருந்திருக்கிறது.
 

தற்போது கரோனா தொற்றுயுகம் என்பதால் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பசும்பொன் செல்வதற்கான நடைமுறைகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் அரசால் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார், நாளை பசும்பொன்னில் நடக்கிற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிக்கு மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து செல்வதற்கு அனுமதி கிடையாது என அறிவித்திருக்கிறார்.


கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாக்குச் செல்பவர்கள் 5 பேருக்கு மிகாமல்  அவர்கள் சார்ந்த அமைப்பின் தலைவர்கள், பிரதிநிதிகளிடம் அனுமதிக் கடிதம் பெற்று விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டரால் பரிசீலிக்கப்பட்டு அவரது நேரப் பட்டியலின்படியே உரிய நேரத்தில் அஞ்சலி செய்ய வேண்டும்.
 

மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திவிழா பாதுகாப்பை முன்னிட்டு மாவட்டத்தின் எல்லைகளில் 15 வகையான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுத் தணிக்கைகளின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். இதன் பொருட்டு கூடுதல் எஸ்.பி.யின் தலைமையில் 10 டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 125 எஸ்.ஐ.க்கள், 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

அத்துடன் மாவட்டத்தில் தலைவர்கள் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தும் வகையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலம் செல்லவும், முளைப்பாரி, பால்குடம் எடுத்தல், பட்டாசு வெடித்தல் போன்றவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார் எஸ்.பி. ஜெயக்குமார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அன்பில் மகேஷ் மரியாதை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Anbil Mahesh respects the statue of Muthuramalinga Thevar

 

திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு‌.மதிவாணன் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தராஜ், செங்குட்டுவன்,  மூக்கன்,  லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், ராஜ் முகமது, மணிவேல்,  சிவாகுமார் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

 

Next Story

"தேவரின் தேசிய சிந்தனைகளை பாடமாக கற்றுத்தர வேண்டும்" - வைரமுத்து விருப்பம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

vairamuthu about muthuramalinga thevar

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா இன்று (30.10.2023) கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேவர் திருமகன் என்பது ஒரு இனப்பெயர் அல்ல. தேசத்தின் அடையாளங்களில் ஒன்று. அருள்கூர்ந்து தமிழ் சமூகம் தேவர் பெருமகனை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்து விட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது என் குரல் அல்ல. தேவர் பெருமகன் சொன்ன சொல். 

 

தேவர் திருமகன் சொன்னார், எனது ஆறு மாதத்தில் தாயை இழந்தேன்; எனக்குப் பாலூட்டியவர் ஒரு முஸ்லிம் தாய், கல்வி கொடுத்தோர் கிறித்துவப் பாதிரிமார்கள் என் பெற்றோர் இந்துக்கள், இதில் எங்கே இருக்கிறது சாதி? என கேட்டார். அவரை சாதி என்ற வட்டத்தை விட்டுவிட்டு தேசியம் என்ற பெரும் சிந்தனைக்குள் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சொன்னார், 2 லட்சம் ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றேன். இதில் என் சமுதாய ஓட்டுகள் வெறும் 18 ஆயிரம் தான். மீதமுள்ள ஓட்டுகள் எல்லாம் அத்தனை சமூகவத்தரும் இட்டு வெற்றிபெற செய்தார்கள் என்றார். அந்த வட்டத்தை விட்டு அவரை வெளியே கொண்டு வந்து அவரது தேசிய சிந்தனைகளை, சமூக சிந்தனைகளை, அவரது தியாகத்தை, ஒரு பெரிய பாடமாக இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

 

இன்னொன்று, தேவர் என்று சொன்னால், அது சாதிய அடையாளம் என்று ஒரு குறிப்பிட்ட வட்டம் என்பது இல்லை. உ.வே சாமிநாத ஐயர் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, வ.உ சிதம்பரம் பிள்ளை என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, லட்சுமண சாமி முதலியார் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, இவையெல்லாம் அவர்களின் குடி அடையாளம். என் தந்தை வரைக்கும் தேவர் என்ற பட்டத்தை வைத்து கொண்டது அவர்களின் அடையாளம். நான் வைத்துக்கொள்ள போவதில்லை என்பது எனது சமூகசீர்திருத்தம், எனது உள்ளம். எனவே பழைய பெயர்களை அழித்து விட வேண்டாம். புதிதாக யாரும் சாதி பெயர்களை வைத்து கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோளாக இருக்கிறது. அம்பேத்கரை எல்லா சமூகமும் கொண்டாட வேண்டும் என்பதை போல தேவரையும் அனைத்து சமூகமும் கொண்டாட வேண்டும்" என்றார்.