Published on 19/06/2022 | Edited on 19/06/2022

சர்வதேச தந்தையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்! தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.
அப்பாக்களின் தினம் இன்று!
உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்!#FathersDay-இல் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்! pic.twitter.com/Nu9zYPU6R8— M.K.Stalin (@mkstalin) June 19, 2022