Published on 02/06/2022 | Edited on 02/06/2022

இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'ராஜா லைவ் இன் கான்செர்ட்' நிகழ்ச்சி கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ''உங்களைப் பார்த்ததும் மிகவும் சந்தோசமா இருக்கு சார், என்ன பேசுவதென்று தெரியவில்லை உங்களைப் பார்த்ததும். தேங்க்யூ சார்'' என்றார். அதன்பிறகு மைக்கை வாங்கிய இளையராஜா 'உங்க ஊரிலேயே நான் 16 வயதாக இருக்கும்போது என் அண்ணனோட வந்து இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். எனக்கு கலைஞர் தந்தைக்கு சமம்'' என்றார்.