Skip to main content

ரத்தம் சொட்ட சொட்ட ரயில் பயணம்; முதலுதவி பெட்டி எங்கே?

Published on 13/05/2025 | Edited on 13/05/2025
A train journey dripping with blood; where is the first aid kit?

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பெண் ஒருவர் மீது மிடில் பெர்த் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதோடு ரயிலில் முதலுதவி சிகிச்சை பேட்டி இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண் தலையில் இரத்தம் சொட்ட சொட்ட  கைக்குட்டையை வைத்துக் கொண்டு பயணம் செய்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோதி. எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அண்மையில் தன்னுடைய மனைவி சூர்யா மற்றும் 14 வயது மகனுடன் ஜோதி சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 'S5' பெட்டியில் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது ஜோதியின் மனைவி சூர்யா லோயர் பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். சுமார் 1:30 மணி அளவில் ரயிலானது தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது சூர்யா படுத்திருந்த லோயர் பெர்த் மீது மேலே உள்ள மிடில் பெர்த் சங்கிலியிலிருந்து நழுவி விழுந்தது.

இதில் கீழே உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து ரத்தம் அதிகமாக வெளிப்பட்டது.  அதிர்ச்சி அடைந்த சூர்யாவின் கணவர் ஜோதி டிக்கெட் பரிசோதகரை நாடியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தலையில் ரத்தம் வருவதால் உடனடியாக  சிகிச்சை அளிக்க வேண்டும் ரயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகரோ முதலுதவி பெட்டி இல்லை தெரிவித்துள்ளார். முதலுதவி பெட்டி இல்லாததால் தலையில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட பயணித்துள்ளார் ஜோதி. பின்னர் ரயில் சேலம் வந்த பிறகு  சேலம் அரசு மருத்துவமனையில் ஜோதி சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்