
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், ஆத்தூர் நடராஜன் தலைமை தாங்கி னார். சிறப்பு பேச்சாளர் கரூர் மதி என்ற மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி பேசும் போது, “நான் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட 1989ம் ஆண்டு முதல் இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து வரும் கிராமங்களில் என்.பஞ்சம்பட்டி கிராமமும் ஒன்று. சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை என்.பஞ்சம்பட்டி கிராம மக்கள் எனக்கு அதிகளவில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெற வைத்தார்கள். அதை நான் என்றும் மறக்க மாட்டேன். தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சி நடைபெறுகிறது. குறிப்பாக பெண் சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விடியல் பயணம், கல்லூரி மாணவியருக்கு உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, முதியோர்களுக்கான நிவாரணத்தொகை, உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அதற்கான சிறப்பு முகாம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். என்.பஞ்சம்பட்டி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் குடிதண்ணீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் ஒன்றியத்தில் கிராமப்புற மாணவ மாணவிகள் எதிர்கால நலன் கருதி, ரூபாய் 75 கோடி மதிப்பில் அரசு கூட்டுறவு கலை கல்லூரி சீவல்சரகு அருகே அமைக்கப்பட்டுள்ளது. என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு மட்டும் தனி கவனம் செலுத்தி, பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டிடங்கள், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வரப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் 1500 வீடு கள் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் 8 ஆண்டுகளில் 8 லட்சம் கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளார். ஒரு ரூபாய் செலவில்லாமல் கூட்டுறவுத்துறை, சத்துணவுதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிஏற்பார். கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் வாக்குறுதிக்காக ரூபாய் 5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 5 பவுன் நகை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்தவர்களுக்கு திரும்பி வழங்கப்பட்டது.

கிராமப்புற ஏழை மக்களுக்காக 100 நாள் வேலைத்திட்டத்தை, கடந்த காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உள்ள 552 மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் 100 நாள் வேலைதிட்டத்ததை சிறப்பாக செயல்படுத்தியதால் பிரதமரிடம் விருது பெற்றது. ஆனால் இன்று மத்தியில் ஆளும் பாஜக அரசு 100 நாள் வேலைதிட் டத்தை முடக்கி கிராமங்களில் வேலையில்லா திட்டத்தை உருவாக்க நினைக்கிறது. இதை ஒரு போதும் தலைவர் திமுக அரசு அனுமதிக்காது” என்று கூறினார்.