Published on 13/05/2025 | Edited on 13/05/2025

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட சாமியார் ஒருவர் நாகப்பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு ஆசீர்வாதம் வழங்கிய சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மலாலிநத்தம் அடுத்துள்ள சித்தேரிக்கரை பகுதியில் ஞானசக்தி நாகாத்தம்மன் கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்பொழுது கோவிலுக்கு வந்த சாமியார் ஒருவர் புட்டியில் அடைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பை திறந்து வைத்து பூஜை செய்துவிட்டு அதை எடுத்து கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார். அங்கிருந்தவர்கள் இதனைப் பார்த்து சிலர் பக்தி பரவசம் அடைந்தனர். ஆனால் பலர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களில் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.