Skip to main content

ஜீவா நினைவு நாள்...  தோழர்கள் மலர் மரியாதை! 

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

"காலுக்கு செருப்பு மில்லை...
கால் வயிற்று கூழுமில்லை..,
பாழுக்கு உழைத்தோமடா,
என் தோழனே:,
பசையற்றுப் போனோமடா..., "

என இந்திய தொழிலாளிகளின் வாழ்வியல் நிலையை தனது பாட்டால் உரத்துக் கூறியவர் ப.ஜீவானந்தம்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு 10 ஆண்டுகள் சிறை பட்டவர் ஜீவானந்தம். தேசத்தந்தை மகாத்மா காந்தியால் நீங்கள் இந்தியாவின் சொத்து என்று அழைக்கப்பட்டவர் தான் ஜீவானந்தம். பொதுவுடமை இயக்கத்தில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர்.

 

 Jiva Memorial Day ... Flower courtesy


ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முதல் பத்திரிகையாளரும் ஜீவானந்தமே,  ஆம், மாவீரன் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன் என்ற நூலை ஜீவானந்தம் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காக அப்போதைய அரசு ஜீவானந்தத்தை கைது செய்தது.

 

 Jiva Memorial Day ... Flower courtesy


கவிதை, கட்டுரை, பாடல்கள் என ஏராளமான நூல்களை எழுதியவர். மேடைப் பேச்சில் ஜீவாவின் பேச்சுக்கள் ஒரு  கர்ஜனையாக எதிரொலிக்கும் என அனைத்து கட்சி தலைவர்களிடமும் பாராட்டைப் பெற்றவர்.

1963 ஜனவரி 18 ல் ஜீவானந்தம் மறைந்தார். ஜீவாவின் 57 ஆவது வருட நினைவு நாள் இன்று. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஜீவாவின் நினைவுநாளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் அவரது படத்திற்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டது. 

 

 Jiva Memorial Day ... Flower courtesy


ஜீவாவின் சொந்த ஊரான குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள அவரது சிலைக்கு கலை இலக்கிய பெருமன்றம் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் சென்னை தாம்பரத்தில் உள்ள ஜீவாவின் சிலைக்கு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மற்றும்  ஜீவாவின் மகன் ஜீவாமணிக்குமார் உட்பட பலரும் மலர் மரியாதை செலுத்தினார்கள்.

ஈரோடு, கோவை, சேலம், மதுரை, கடலூர் என அனைத்து பகுதியிலும் ஜீவாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மறைவு! 

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Former communist MLA S. Rajasekaran passed away

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிறைந்திருந்த குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராஜசேகரன். கீரமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போது கிராமங்கள் தோறும் நடக்கும் கம்யூனிஸ்ட் மக்கள் நலப் போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களைப் பார்த்து இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஜமீன் ஒழிப்பு போராட்டம், தொழிலாளர் நலப் போராட்டங்களில் பங்கேற்றவர். பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டார். அதேபோல படிப்படியாக கட்சிப் பதவிகளிலும் முன்னேறினார்.

2001ம் ஆண்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டாலும் அடுத்து 2006ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

2011ல் சட்டமன்ற உறுப்பினர் காலம் முடிந்த பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.

Next Story

ஆளுநர் தேநீர் விருந்து; காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Governor's Tea Party; Congress, Communist parties boycott

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பர்.

அந்த வகையில் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி  மாலை ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து அளிப்பது குறித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.