Skip to main content

பொதுமுடக்கம் மட்டுமே கரோனாவுக்கு தீர்வல்ல - மருத்துவக் குழுவினர் தகவல்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

ிு

 

இன்று காலை மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசித்தார்.

 

இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜூன் 30- ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் மருத்துவக் குழுவினருடன் பொதுமுடக்கம் தொடர்பாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை செய்தார். மருத்துவக் குழுவினருடன் முதல்வர் மேற்கொள்ளும் ஒன்பதாவது ஆலோசனை இது. ஆலோசனையின் முடிவில் மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் அவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

அதில், "தற்போது முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளோம். எங்களுடைய கருத்துகளை அவரிடம் தெரிவித்துள்ளோம். ஊடரங்கு மட்டுமே கரோனாவுக்கு தீர்வல்ல என்பதால் நாங்கள் பொதுமுடக்கத்தை பரிந்துரைக்கவில்லை. எனென்றால் தொடர்ந்து ஊரடங்கை நீடிக்க முடியாது. முடக்கம் என்பது ஒருவகையில் தீர்வு தருமே தவிர, முடக்கம் மட்டுமே தீர்வல்ல. அதைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை நீட்டிக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் 80 சதவீதம் மக்களுக்கு லேசானா அறிகுறிகளுடனே கரோனா தொற்று வருகின்றது. சுவை, மனம் தெரியவில்லை என்றால் கண்டிப்பாக அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். சென்னையைப் போல திருச்சி, மதுரை, வேலூர் போன்ற ஊர்களிலும் பரிசோதனையை அதிகப்படுத்த கோரியுள்ளோம்" என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்