Published on 24/12/2021 | Edited on 24/12/2021

ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், 'ஜல்லிக்கட்டு' நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. எப்போதுமே தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு வரும் ஜனவரியில் நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 15 அன்று உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.