சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.