Published on 12/05/2023 | Edited on 12/05/2023

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் கட்டியக்காரனூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, மே 9ம் தேதி மாலையில் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது கடையில் இருந்த மளிகைக்கடை உரிமையாளர் கருப்பண்ணன் (51) அந்தச் சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்த சிறுமி, தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் இந்திரா மளிகைக் கடைக்காரர் கருப்பண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். அவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.