Skip to main content

ரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி... ஈரோடு தொழிலதிபர் கைது

Published on 18/10/2019 | Edited on 19/10/2019

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்பாட்டில் அன்னை இன்பிரா என்ற பெயரில் பைப் மற்றும் சில இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனராக இருப்பவர் பெருந்துறையை சேர்ந்த அசோக்குமார். இந்த அசோக்குமார் மறைந்த முன்னாள் பெருந்துறை எம்.எல்.ஏ. வி.பி.பெரியசாமியின் அக்கா மகன்.
 

தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் வரை இந்த நிறுவனத்தின் தொழில் நீடித்துள்ளது. இப்போது ஆந்திரா மாநில போலீல் நேரடியாக ஈரோடு வந்து அசோக்குமாரை அள்ளிக் கொண்டு போய் அங்கு கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. ரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி என்று தான் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். ஜி.எஸ்.டி. வரியே 450 கோடி மோசடி என்றால், அடேங்கப்பா அப்போது எத்தனை கோடிக்கு தொழில் நடத்தியிருக்க வேண்டும் என்ற அதிர்ச்சியான கேள்வியுடன் எல்லா டாக்குமென்ட்டுகளையும் அலசி ஆராய்ந்தபோது தான் அந்த அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தது.

erode business man gst scam 450 crores gst officers investigation



ஆந்திரா அரசிடம் போடப்பட்ட  ஒப்பந்தப்பணிகளை முடியாமலேயே செய்து முடித்ததாக போலி ரசீதுகளை அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் சப்ளை செய்ய வேண்டிய பைப்புக்களை கொடுக்காமலேயே கொடுத்தாகவும்  விற்பனை செய்ததாக வழங்கிய  போலி ரசீது மற்றும் ஆவணங்களை போலீசார் எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆந்திரா மாநிலம்  ஜி.எஸ்.டி.,- யின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆய்விலும் விசாரனையிலும் உள்ளார்கள். ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு பல பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் ரகசியமாக ரெய்டு நடத்தியுள்ளார்கள். சோதனையில் போலி ரசீதுகளை கைப்பற்றியுள்ளனர். அதற்கு மட்டும்  மொத்தம் 450 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு  மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நேற்று அசோக்குமாரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
 

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் வைத்து  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  வருகிற 30ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும் போலீசார் அசோக்குமாரை போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்துள்ளார்கள்.  இவர் கடந்த ஒரு வருடத்தில் 2018 முதல் ஆகஸ்ட் 2019 ம் ஆண்டு வரை மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மறைந்த முன்னாள் பெருந்துறை எம்.எல்.ஏ. வி.பி.பெரியசாமி, 1994ல் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார். பெரியசாமிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தான் சீட் வழங்க ஏற்பாடு செய்தார் என்பதால், அதிகாரிகள் அமைச்சருக்கு வேண்டியவர்களையும் விசாரிக்கலாம் என்று கூறுகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.