Skip to main content

காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும்! - நாஞ்சில் சம்பத் பேட்டி

Published on 31/08/2018 | Edited on 31/08/2018


திரை உலகினர் யாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது, அதே போல் தமிழக அரசியலில் திரை உலகினர் கால் ஊன்ற முடியாது. காடு, நிலம், நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும் என்றார் நாஞ்சில் சம்பத்.

பல்வேறு நிகழ்ச்சிக்களில் பங்கேற்பதற்காக திருவாரூர் வந்திருந்த நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

டிடிவி தினகரன் அணியில் இணையப்போவதாக தகவல் பரவிவருகிறதே?

அந்த தகவல் பொய்யானது. வேண்டாதவர்கள் எனக்கு வைக்கும் வேட்டு. அரசியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். இனி எந்த கட்சியிலும் இணைய மாட்டேன்.

திருச்சி முக்கொம்பு கதவணை உடைந்தது யார் தவறு?

தண்ணீர் வருவது குறித்து அறிந்த தமிழக முதல்வர் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மாறாக காவிரி தண்ணீரை கடலில் கொண்டு விட்டது தான் தமிழக அரசின் சாதனை. அவர்களின் நிர்வாகம். காவிரி நீர் இன்னும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கிடைக்காமல் வரண்டு காய்ந்து கிடக்கிறது. வரும் வழியெல்லாம் மனம்நொந்து பார்த்துவந்தேன், வேதனை. இனியாவது தமிழக முதல்வர் தண்ணீர் பயன்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திமுகவில் தன்னை இனைத்துக்கொள்ள வேண்டும் என்று அழகிரி கூறிவருவது?

அழகிரி திமுகவின் தென் மண்டல செயலாளராக பணியாற்றி உள்ளார். தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்து ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க கூடியவராக இருந்துள்ளார். எனவே திமுகவில் அழகிரியை இணைத்தால் திமுக வலுபெறும் அந்த முடிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.

விஷால் இயக்கம் தொடங்கியுள்ளாரே?

நடிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது இடைத்தோ்தலில் வெட்ட வெளிச்சமாகிவிடும். திரையுலகத்தினர் யாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது, திரையுலகினர் தமிழக அரசியில் காலுன்ற முடியாது. அப்படி கனவு காண்பவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்.

நடிகர்கள் கட்சி தொடங்குவதால் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?

காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும் வேறு எந்த இயக்கத்திற்கு இங்கு இடமில்லை. இவ்வாறு தனக்கே உறிய பானியில் பதிலைக் கூறினார் நாஞ்சில்.

 

சார்ந்த செய்திகள்