ஜெ. மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவு ஏற்பட்டு தற்போது எடப்பாடி, ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பில் புதிய அ.தி.மு.க.வில் முக்கிய தலைவர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு வெளியிடுவதிலேயே பெரிய முட்டல் மோதல்களிலே இருந்து வருகிறது. அதனால் ஏற்கனவே் அறிவிப்பு பாதி வெளியாகி பாதியிலே நின்று போனது.
பதவியை மாற்றி வாங்கிய பரஞ்சோதி

ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த பரஞ்சோதிக்கு இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அறிவிப்பு கொடுக்கப்பட்ட சில மணி நேரத்திலே ஓ.பி.எஸ்.யை தொடர்பு கொண்ட பரஞ்சோதி எனக்கு வயசாயிடுச்சு எனக்கு போய் இளைஞர் இளம் பெண்கள் பாசறையினா கிண்டல் பண்ண மாட்டாங்களா? நானே ஸ்டாலினை பல மேடைகளில் கிண்டல் பண்ணியிருக்கேன். அதுவும் இல்லாமல் மருத்துவர் ராணியோட பிரச்சனை இப்ப தான் முடிஞ்சது. அதனால் இந்த பதவி எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட சரி நா வேற பதவி வாங்கி தரேன் என்று சொல்லி 3 மாதங்களுக்கு பிறகு தற்போது கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டவுடன் பரஞ்சோதி சென்னைக்கு சென்று துணை முதுல்வர் ஓ.பி.எஸ் நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
பொறுப்பை மறுக்கும் இளவரசன்.

அ.தி.மு.க. கட்சியில் திருச்சி அரியலூர் பகுதியில் முக்கியமான நபர் இளவரன். கட்சியில் திருச்சி விமானநிலையத்தில் பா.சிதம்பரத்தை இரும்பு ராடால் தாக்கியே கட்சியில் பெரிய பதவிகளை வகித்தவர். அவர் சார்ந்த சமூகத்தில் சீனியர்களில் இவர் முக்கியமானவர். ஆனாலும் தற்போது கட்சியில் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லாமல் இருந்தவர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமையில் பேச்சுவார்த்தையின் முடிவில் உங்களுக்கு ஒரு நல்ல பொறுப்பு கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள். அவருக்கு தற்போது எம்.ஜி.ஆர். மன்றத்தில் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. பொறுப்பு அறிவித்த உடனே ஓ.பி.எஸ்.க்கும், எடப்பாடிக்கு போன் செய்து எனக்கு இந்த பொறுப்பு வகிக்க விறுப்பம் இல்லை. என்று சொல்லிட்டாராம். கட்சியில் கிளை அணிக்கு தேவையில்லை. கட்சியில் எங்கள் சமூகத்தில் நான் தான் சீனியர் எனக்கு இந்த பதவி வேண்டாம். என்று மறுத்து விட்டாராம்.
சீனியர்களை ஒருங்கிணைத்து அவரவர்கள் விருப்பத்திற்கு பொறுப்புகளை கொடுப்பதற்குள் அ.தி.மு.க. தலைமை திண்டாடிக்கொண்டிருக்கிறது.