Skip to main content

இளைஞர்களுக்கு வலை வீசும் போதை பெண்கள் - தட்டிக்கேட்ட பெண் போலீசுக்கு அடி,உதை, ஆடை கிழிப்பு

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

 

m


திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில்  மாநகராட்சியின் பயணிகள் தங்கும் விடுதி உள்ளது.  இந்த பயணிகள் தங்கும் விடுதியில் பெரும்பாலும் பயணிகள் தங்குவதில்லை.  ஆனால் மற்ற தொழிலுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் .   அதுபோல் நகரில் பல தங்கும் விடுதிகளிலும் பாலியல் தொழில் தான் கொடிகட்டிப் பறந்து வருகிறது.

  
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டு பயணியர் தங்கும் விடுதி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் காயத்ரி என்ற விலைமாது போதை மப்பில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலரில் ஏறி உட்கார்ந்து கொண்டு,  போகும் வரும்   இளைஞர்களுக்கு வலை வீசி வந்தார்.  இந்த விஷயம் பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காக்கியான செல்விக்கு ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தெரியவே உடனே டூவீலரில் உட்கார்ந்து இருந்த விலைமாது காயத்திரியை கீழே தள்ளி விட்டு படார் என ஒரு அறைவிட்டார். இதனால் டென்ஷன் அடைந்த போதை மப்பில்  இருந்த விலைமாது காயத்திரியோ,  பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல் பதிலுக்கு அடித்து விட்டார்.

 

 இதனால் ஆத்திரம்  அடைந்த அந்த பெண் காக்கியோ அந்த விலை மாது சேலையை உருவி வீசி எரிந்தார். உடனே அந்த விலை மாது, போலீசின் யூனிபார்மை கிழித்து விட்டு  ஓடிவிட்டார். அதை கண்டு அந்த பெண் போலீசான செல்வி அசிங்கப்பட்டு தலைகுனிந்தவாரே அருகே உள்ள பஸ் ஸ்டாண்ட்டு காவல் நிலையத்திற்கு சென்றார் இப்படி பெண் போலீசே கிழிந்த அரை குறை யூனிப்பார்முடன் சென்றதை கண்டு பஸ்ஸ்டாண்டில் சில கடைக்காரர்களே வாய் அடைத்து போய்விட்டனர். அப்படி இருந்தும் கூட அந்த விலை மாது மேல் எந்த ஒரு நடவடிக்கையும் காக்கிகள் எடுக்காததால் மீண்டும் அந்த விலை மாது பஸ்ஸ்டாண்டுக்கு இளைஞர்களை தன் வலையில் சிக்கவைத்து சீரழித்து வருகிறார்.   இந்த காயத்திரி போலவே இருபதுக்கு மேற்பட்ட விலை மாதுகள் பஸ்ஸ்டாண்ட்டில் உள்ள மாநகராட்சியின் தங்கும் விடுதி அருகிலேயே முகாம் போட்டு  பலான தொழிலுக்கு இளைஞர்களையும், பெரியவர்களையும் இழுத்து வருவதால் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் இவர்களிடம் சிக்கி பணத்தை பறிகொடுப்பதுடன் . மட்டுமல்லாமல் எய்ட்ஸ் நோய்க்கும் ஆளாகிவருகிறார்கள்.  அந்த அளவுக்கு இந்த தொழில் பஸ்ஸ்டாண்டு உள்பட நகரில் பல பகுதிகளில் கொடி கட்டி பறந்து வருகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         அதை   காக்கிகள் தடுக்க சரிவர ஆர்வம் காட்டுவது இல்லை.  பெண் காக்கிகள் தடுக்க  சென்றால் அவர்களின் யூனிபாமை கிழித்து அசிங்கப்படுத்தும் அளவிற்கு விலைமாதுகள் துணிந்து விட்டதால் பெண் காக்கிகளும் ஆர்வம் காட்டுவதில்லை.  அதுனால மாவட்ட  அளவில் அதிரடி நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வரும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு புள்ளிவைக்க முன் வர வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்