Skip to main content

எரிப்பதில் காட்டிய அவசரம்... மாணவி மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

"பள்ளிக்கூடத்தில் வெறும் ரூ.400 கட்டாததால், தினமும் எல்லார் முன்னாடியும் திட்டி அவமானப்படுத்துறாங்க. இன்னைக்காச்சு குடுங்களேன்' என கெஞ்சிய 12-ஆம் வகுப்பு பயாலஜி படிக்கும் தனது 17வயது மகள் கோமதியை, டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளியான ஆனந்தன் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியபோது, மணி காலை 8:45.

 

incidentஅடுத்த 45 நிமிடத்தில் சகோதரன் மணி கண்டனுக்கு, “"கோமதி திடீரென மயக்கம் போட்டு விழுந்துட்டா. அரசு மருத்துவமனைக்கு கொண்டு போறோம்' என செல்போனில் அழைப்பு வந்தது. அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட்டு, அம்மா ராஜேஸ்வரியையும் கூட்டிக்கொண்டு விரைந்தார் மணிகண்டன். அதிர்ச்சியும் பதட்டமுமாக நின்றிருந்தவர்களிடம் கோமதி வரும்வழியில் இறந்து விட்டதாக தகவல்சொன்னார் கரூர் மருத்துவக் கல்லூரி டீன் ரோசி வெண்ணிலா.


இதயமே வெடித்ததுபோல் அவர்கள் கதறியழுது கொண்டிருந்த நேரத்தில், கலெக்டர் அன்பழகன், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர்வந்து ஆறுதல் கூறினர். அடுத்த சில மணிநேரங்களில் மாவட்ட எஸ்.பி. பாண்டிய ராஜன், டி.எஸ்.பி. சுகுமார் தலைமையிலான டீமை இறக்கி சடலத்திற்கு எரியூட்டி இறுதிச்சடங்கையும் முடித்தனர். இப்படி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லோரும் காட்டும் மும்முரத்தால் சந்தேகமடைந்த கோமதியின் பெற்றோர், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்திருக்கின்றனர்.

கோமதியின் தந்தை ஆனந்தனிடம் நாம் பேசினோம், "நல்ல படிப்பாளி புள்ள சார். அரசாங்க வேலைக்குப் போய் எங்களைக் காப்பாத்துவேன்னு அடிக்கடி சொல்லுவா. அதான், அரசாங்கமே எம்பொண்ணை எரிச்சிடுச்சு'' கோவென்று அழுதவர் மீண்டும் பேசத்தொடங்கி, “சொந்தக்காரங்க வரட்டும். எங்க வழக்கப்படி புதைக்கணும்னு எவ்வளவோ கெஞ்சினோம். கேட்கலையே. இந்த அமைச்சர், அதிகாரிங்கள்லாம் யாரு? எதுக்காக இத்தனை அவசரம்? எம்பொண்ணு செத்துப்போன தகவலையே ஸ்கூல்ல சொல்லலை. என்ன நடந்ததுன்னும் யாருக்கும் தெரியலையே'' என்று கதறியழுதார்.

கோமதியின் பள்ளித்தோழிகளோ, “அடுத்த வங்களுக்கு கஷ்டம்னா ஓடிவந்து உதவக்கூடிய, தங்கமான பொண்ணு கோமதி. ப்ளஸ் டூ ஸ்பெஷல் க்ளாஸ்க்காக 9 மணிக்கெல்லாம் ஸ்கூல் வந்தவ, கழிவறைக்கு போனபோது, மயங்கி விழுந்துட்டா. ஆசிரியர்கள் மீட்டுத்தான் மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க'' என்றனர் அதிர்ச்சி விலகாமல். “அதிக ரத்தஅழுத்தம் இருந்ததுதான், கோமதி மயங்கி விழுந்து உயிரிழந்ததற்குக் காரணம்' என உடற்கூராய்வு தகவலில் சொல்லப் பட்டுள்ளது.

"கரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜியின் உறவினர்களான சிலர் தலைமைச் செயலகத்தில் மிக உயர்பதவியில் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக வந்த பிரஷர் தான், கலெக்டர் முதல் அமைச்சர் வரை காட்டிய அவசரத்தின் பின்னணி' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காணாமல் போன இளம்பெண்; கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையம் முற்றுகை

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Missing Girl; Find out and lay siege to the police station

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 19 ந் தேதி திடீரென காணாமல் போன நிலையில் உறவினர், தோழிகள் வீடுகளில் எல்லாம் தேடிய உறவினர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில் ஆலங்குடி போலீசார் அந்த பெண் பயன்படுத்திய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர் யாருக்கெல்லாம் போனில் பேசியுள்ளார் என்ற விபரங்களை சேகரித்து சில குறிப்பிட்ட எண்ணில் உள்ளவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புகார் கொடுத்து சில நாட்களாகியும் இளம்பெண்ணை கண்டுபிடித்துத் தரவில்லை என்று இன்று செவ்வாய்க் கிழமை மாலை ஆலங்குடி காவல் நிலையம் முன்பு திரண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் செல்போன் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர் விசாரனை நடப்பதால் விரைவில் மீட்கப்படுவார் என்று போலீசார் உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

Next Story

தேள் கடித்ததில் அலட்சியம் ; சிறுவன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கிராமம்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Negligence in scorpion stings; The village is plunged into grief due to the death of the boy

தேள் கடித்தும் அலட்சியமாக இருந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜோதி ராமன். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டருகே நண்பர்களுடன் ஜோதி ராமன் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பொழுது கருந்தேள் ஒன்று ஜோதி ராமனை கடித்துள்ளது. ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சிறுவன் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திடீரென மயக்கம் வருவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் சிறுவன் சொல்லியுள்ளான். உடனடியாக சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற பெற்றோர் ஆய்வு செய்ததில் அங்கு கருந்தேள் ஒன்று இருந்தது. உடனடியாக சிறுவனை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஜோதி ராமன் உயிரிழந்தான். தேள் கடித்து ஆறாம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பொன்னாங்குளம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.