Published on 27/03/2020 | Edited on 27/03/2020
கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தமிழகத்தின் கள்ளக் குறிச்சியை சேர்ந்தவர்கள் கட்டிட வேலைக்சென்றிருந்தார்கள். கரோனா தாக்கம் கேரளாவில் பெரிய அளவு இருப்பதால், சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த ஐந்து பேரை கோவை சுங்கச் சாவடியில் வைத்து கரோனா சிகிச்சைக்கு ஆட்படுத்த காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.