Published on 18/02/2021 | Edited on 18/02/2021

மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று (17.02.2021) இரவு பணி முடிந்து வீட்டுக்குச் செல்லாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், இன்று காலை பணிக்கு வந்த சக தூய்மைப் பணியாளர்கள் இரண்டாம் தளத்தில் சென்று பார்த்தபோது, அங்கு வேல்முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார். சம்பவம் குறித்து தல்லாக்குளம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.