Published on 08/06/2021 | Edited on 08/06/2021

தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவிற்கு நேற்று முன்தினம் (06.06.2021) துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர், பகுதிநேர உறுப்பினர்கள் ஆகியோரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை குழு ஆலோசனை தற்போது முதற்கட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு மாநில மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து அடுத்த கட்ட ஆலோசனை எழிலகத்தில் நடக்கவுள்ளது. தற்போது தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வளர்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ. ஜெயரஞ்சன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.