Skip to main content

சான்றிதழ்களை கிருபாமோகன் பல்கலைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம் உத்தரவு.

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பெளத்தம் படித்துக் கொண்டிருந்த மாணவர் கிருபா மோகன் கல்லூரியிலிருந்து 06.09.2019 தேதியிட்டு  Not approved for his provisional admission என்று தெரிவிக்கப்பட்டு திடீரென நீக்கப்பட்டார்.  மாணவர் கிருபாமோகன் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் படித்து முடித்தவர். அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திலும் செயல்பட்டு வந்தவர்.
 

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தனக்குக் கல்வி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் மாணவர் கிருபாமோகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இன்று (17.109.2019) இவ்வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மாணவருக்காக ஆஜராகி வாதாடினார். அவருடன் வழக்கறிஞர்கள் சு.ஜிம் ராஜ் மில்ட்டன், ச.பார்த்தசாரதி, மீனாட்சி ஆகியோர் ஆஜரானார்கள். 

CHENNAI HIGH COURT KIRUPA MOHAN MADRAS UNIVERSITY HIGH COURT ORDER




சென்னைப் பல்கலைக்கழத்தின் உத்தரவில்-

1. ஏற்கனவே  முதுநிலை படித்தவராக இருந்தால், அவர் எந்தப் பாடத்திலும் தோல்வியடைந்திருக்கக் கூடாது.

2. கல்லூரியின் நடத்தை விதிகளை மீறியிருக்க கூடாது.

3. ஏற்கனவே  படித்திருந்த துறைத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு, இந்த மூன்று விதிகளில் எந்த விதியை மீறியிருக்கிறார் என கல்லூரியின் நீக்க உத்தரவில் கூறப்படவில்லை என்றும், இவ்வாறு எவ்வித காரணமும் தெரிவிக்காமல் மாணவருக்குக் கல்வி மறுத்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது, உள்நோக்கமுடையது என்றும் வாதிட்டார்.
 

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பாக ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் விஜய் நாராயணன் அவர்கள், மாணவர் கிருபாமோகனை பல்கலைக்கழக விதிகளின்படிதான் நீக்கியுள்ளதாக வாதாடினார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாணவர் கொடுக்க வேண்டிய ஆவணங்களான இளங்கலை பட்டத்திற்கான தகுதிச்சான்றும் (Eligibility certificate) பரிந்துரைக் கடிதமும் சென்னைப் பல்கலைக்கழகம் கொடுக்க வேண்டியிருப்பதால் மாணவர் கிருபாமோகன் மேற்சொன்ன சான்றிதழ்களை சென்னைப் பல்கலைக்கழகத்திடமே விண்ணப்பித்து, அந்த ஆவணங்களைப் பெற்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. 3 வார காலத்திற்குள் மேற்சொன்ன பணிகளை நிறைவு செய்யவும், 3 வார நிறைவில் மீண்டும் வழக்கைப் பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்