
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) இணைத் தலைவராக பூபேஷ் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) இணைத் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான இந்திரா புராஜெக்ட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பூபேஷ் நாகராஜன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் இன்ஜினியரான இவர் கட்டுமானத்துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர். பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து தாய்லாந்து, சிங்கப்பூர், போன்ற நாடுகளில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் கட்டிட விரிவாக்க மேம்பாட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். இந்த ஆண்டின் வணிக உச்சிமாநாடுகள் மற்றும் முதன்மையான தொழில் நிகழ்வுகளில் இவர் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.