Skip to main content

ஆம்பூரில் அரபு நாட்டு இளவரசி

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்கிற நிகழ்ச்சியை அனைக்கர் கல்வி குழுமம் என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சி பிப்ரவரி 22ந்தேதி, ஆம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஐக்கிய அரபு நாடுகளின் இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸம் வந்து கலந்துக்கொண்டார். 

 

c

 

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், அனைக்கர் கல்விக் குழுமத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அரபு நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸம் விருதுகளை வழங்கி கவுரவித்தார். முஜுபுனிசா, நசீமா சுல்தானா, நஸ்ரீன் பேகம், ஷேக் அப்துல் நாசர் ஆகியோர் இளவரசி கரங்களால் சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்றனர். வி.என்.கலீலுல்லாவுக்கு இந்தியாவின் பசுமை மனிதர், அப்துல்கனி என்பவருக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். 

 

c

 

அரசு இளவரசி இஸ்லாமியர்களின் நிகழ்ச்சிக்கு வந்தது, இஸ்லாமியர்களை விட பிற மதத்தினரை ஆச்சர்யப்படவைத்தது. இளவரசி என்பவர் பெரிய ஆடம்பரமாக இருப்பார் என பலரும் எதிர்பார்த்து நிகழ்ச்சியை காண சென்றுயிருந்தவர். அவரை சாதாரணமாக, எளிமையாக இருந்தது பார்த்தவர்களை ஆச்சர்யப்படவைத்தது.


 

சார்ந்த செய்திகள்