உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. அதே சமயம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும் எங்கும் நலமே சூழட்டும்' என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, 'உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் புத்தாண்டு வழங்கட்டும்' என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அனைவருக்கும் புதிய நம்பிக்கையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். இந்த ஆண்டு மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தவெக கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்' புத்தாண்டில் உண்மையான சமூக நீதியுடன் சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி ஒற்றுமை சகோதரத்துவம் மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை மண்ணுரிமை காப்போம்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைவர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், 'நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2025
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025