Published on 06/05/2020 | Edited on 06/05/2020
திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இதில் மே 7ந்தேதி, காலை 10 மணிக்கு 166 கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 49 கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
அவை கரோனா நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளாகும். இந்த பகுதி ரெட் அலர்ட் பகுதியாக இருப்பதால் இங்கு கடைகள் திறக்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைகள் திறக்கப்படாத பகுதி மற்றும் ரெட் அலர்ட் பகுதியில் இருந்து யாரும் கடை திறக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று மதுவாங்க முடியாதபடி கண்காணிப்பு செய்யுங்கள் என கரோனா தடுப்புக்கான கிராம கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 42 என்பதும். தற்போது 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.