Skip to main content

’மோடிக்கு நாமம் போடுவோம்’ - ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

கெட்டவுட் மோடி என்று சொல்லுவோம்.. என ஈரோடு மாவட்டம்  பெருந்துறையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

 

e

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை  பகுதியில் 27.3.19 இரவு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் ஓட்டு கேட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசியபோது,   ‘’தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகாலம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நான் ஏழு நாட்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறேன்.

 

e

 

தற்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை பலமாக வீசுகிறது. இதை மக்களே கூறுகிறார்கள். இது தி.மு.க. தலைவர்  ஸ்டாலினின் ஆதரவலை.   மோடி கடந்த தேர்தலின் போது நமது வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவதாக கூறினார். அவர் நமக்கு போடவில்லை. அதனால் நாம் அவருக்கு போடுவோம் நாமம். வருகின்ற தேர்தலில் நாம் மோடிக்கு சொல்வோம் கெட்டவுட். தற்போது தங்களிடம் உள்ள உற்சாகம் வருகின்ற ஏப்ரல்  18 ந்தேதி வரை தொடரவேண்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மோடி நம்மை வைத்து கெடுதல் செய்தார், இப்போது நாம் அவரை வெளியே போங்க என அனுப்பி வைப்போம். மோடியே வெளியே போங்க " . என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

 

e


தொடர்ந்து ஈரோட்டில் ம.தி.மு.க. வேப்பாளர் கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னதிற்கு  வாக்கு சேகரித்தார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.