Published on 25/08/2018 | Edited on 25/08/2018


நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சேரன்மாதேவி அருகிலுள்ள கூனியூர் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை திடீரென்று சென்றவர் அங்குள்ள ஊராட்சிப் பள்ளியில் குழந்தைகளின் வகுப்பறையை ஆய்வு செய்தார். குழந்தைகளிடம் பேசினார். தொடர்ந்து அந்தப் பள்ளிக்கும், கிராமத்தின் பயன்பாட்டுக்கும் பயன்படுகிற அருகில் உள்ள மேல் நிலைத் தொட்டிப் பக்கம் வந்தவர் திடீரென அதன் ஏணிப்படிகளில் ஏறினார். இது கண்டு உடன் வந்த அதிகாரிகள் அதிர்ந்தனர்.
115 அடி உயரம் கொண்ட இந்த மேல் நிலைத் தொட்டிக்கு விறு விறுவென்று ஏறிய கலெக்டர் ஷில்பா, அதில் புழுக்கள் பூச்சிகள் உள்ளனவா என ஆய்வு செய்து விட்டு பின் தரையிறங்கினார்.
கிராமத்தினரோ, கலெக்டர் ஆய்வு செய்ததால், இனிமேல் ஏரியாவிலுள்ள அனைத்து உயர் நிலைத் தொட்டிகளையும், பணியாளர்கள் தாமதமின்றி துப்புறவு செய்யும் பணிகள் தானாகவே நடக்கும் என்கிறார்கள் மனம் நிறைவாக.