Published on 27/12/2022 | Edited on 27/12/2022
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 89 ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஒரு கட்சி மதவாதக் கட்சியாக செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது. கற்பனையாகக் கூறப்படும் வரலாற்றைக் கண்டு ஏமாந்துவிடக்கூடாது.
நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல. உண்மையான அறிவியல் ஆய்வின் அடிப்படையிலான வரலாற்று உணர்வை மக்களிடம் கொண்டு செல்வது தமிழக அரசின் கடமை.
இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு பழந்தமிழ் நிலப்பரப்பில் இருந்து துவங்கினால்தான் முறையாக இருக்கும். தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக செயல்படுகிறது” எனக் கூறினார்.