Skip to main content

கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு - சு.சாமி கண்டனம்

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
sw

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் டுவிட்டரில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் மற்றும் அவர் ஒரு 420 ஆவார். பிறகு ஏன் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு நான்கு மாநில முதல்வர்களும்  அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்? என கேட்டுள்ளார். 

 

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரி தொடர்ந்து ஏழாவது நாளாக கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கெஜ்ரிவால்.

 

 மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னர் மாளிகையிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால்,  கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்று அவரது மனைவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

 

இந்நிலையில்,  சுப்பிரமணிய சாமி, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் மற்றும் அவர் ஒரு 420 ஆவார்.  அவருக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும்? என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்படியானால் மோடி தவறான முடிவை எடுத்துள்ளாரா?'- நீட் குறித்து பா.ஜ.க சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

'Has Modi made the wrong decision?' - Subramanian Swamy comments on NEET

 

கரோனா காலத்தில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர பஞ்சாப், ராஜஸ்தான், சதீஷ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் முடிவு செய்துள்ளது. சோனியாவுடனான ஆலோசனைக்குப் பின் ஜார்கண்ட், மகாராஷ்டிர மாநில அரசுகளும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது. அதேபோல் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி, "நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்தாமல் தாமதப்படுத்துவது மாணவர்களின் படிப்பை பாதிக்கும் என டெல்லி ஐ.ஐ.டி இயக்குநர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை பெரிதளவு பாதித்துள்ளது. அப்படியானால், ஊரடங்கை அறிவித்ததன் மூலம் பிரதமர் மோடி தவறான முடிவை எடுத்துள்ளாரா? இன்றும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

2024 தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்-பாஜக சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
 Dhoni should contest in 2024 elections - BJP Subramaniam twit

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவதை அடுத்து பல பிரபலங்கள் தங்களது கருத்துகளையும், பிரியாவிடையுடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் 2024 தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டில், கிரிக்கெட்டில் தோனிக்கு இருந்த தலைமை பண்பு பொது வாழ்க்கைக்கு தேவை என கூறியுள்ளார்.