/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp235.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும்ஒரு மத்திய அமைச்சர் வீதம் பா.ஜ.க. அமைச்சர்களின் சுற்றுப் பயண விபரங்களைத் திட்டமிட்டு வருகிறது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. இதற்கான பயண திட்ட விபரங்கள் 90 சதவீதம் முடிந்திருக்கிறது. அந்த வகையில், இனி வரும் மாதங்களில் தமிழகத்தில் தேசிய அளவிலான பா.ஜ.க. தலைவர்கள் வருகைதான் பரபரப்பாக பேசப்படவிருக்கிறது.
பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் வருகை ஒரு புறம் இருக்க, பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் தமிழகத்தை குறி வைத்துள்ளனர். அந்த அமைப்பின் தலைவரான மோகன் பகவத் ஜனவரி மாதம் 13- ஆம் தேதி சென்னைக்கு வருகிறார்.
சென்னையில் குடிசைவாசிகளுக்கு மத்தியில் பொங்கல் விழாவை நடத்தி அவர்களுடன் மகிழ்ச்சியைப்பகிர்ந்துக் கொள்ளவிருக்கும் மோகன் பகவத், அந்த நிகழ்ச்சியில், "பா.ஜ.க.வின் ஆட்சியின் நிர்வாகத் திறனையும், தமிழக அரசியல் கட்சிகளால் தமிழகம் எந்தளவுக்கு பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதையும் விவரித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்" என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)