Skip to main content

அமைச்சருக்கு எதிராக போராட்டம்... அமைச்சர் பதவி பறிபோகுமா? அதிருப்தியில் அதிமுக தலைமை!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கச்சைக்கட்டினார்கள் மூத்த அமைச்சர்கள். அவர்களுக்கு பதிலடி தந்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. ஹிந்து சமூகத்தை ஆதரித்தும் இஸ்லாமியர்களை எதிர்த்தும் பேசி வரும் ராஜேந்திரபாலாஜியை கண்டிக்கும் வகையில் கடந்த 4-ந்தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்  மூத்த அமைச்சர்கள் பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.குறிப்பாக, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினரை பகைத்துக்கொள்வது தேர்தலில் நமக்கு பாதகமாக அமையும். ராஜேந்திரபாலாஜி துடுக்குத்தனமாக எதையாவதுப் பேசி கட்சிக்கு கெட்டப்பெயரை உருவாக்கி விடுகிறார். இனி வரும் நாட்கள் தேர்தலை மையப்படுத்தித்தான் அரசியல் செய்ய வேண்டியதிருக்கும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 
 

admk



இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தார்கள், மாநில நிர்வாகிகள் அப்துல் ரகுமான், சுலைமான் தலைமையில் ராஜேந்திரபாலாஜி தொகுதியான சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பிரிக்க நினைக்கும் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என கோஷமிட்டு வருகின்றனர். அமைச்சருக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்