Skip to main content

''இப்படி அவசர கோலத்தில் முடிவு சொல்லக்கூடாது'' - எம்.பி திருநாவுக்கரசு பேட்டி

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

 "Decisions should not be made in such an emergency" - MP Thirunavukarasu interviewed

 

அவசர கதியில் குஜராத் பாலம் இடிந்த விபத்து குறித்துத் தீர்ப்பு சொல்வது இறந்த மக்கள் மீது கவலையில்லை என்பதை உணர்த்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேசுகையில், ''குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். நிறையப் பேர் காயமடைந்திருக்கிறார்கள். நிறையப் பேரைக் காணவில்லை. இது வரலாற்றில் மிகப்பெரிய கோர விபத்து. பிரதமர் கண்ணீர் வடிக்கிறார்; பேசும்போது அழுகிறார். அப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவத்திற்குத் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுகிறார்கள். அப்படிப்பட்ட விஷயத்தில் அரை மணி நேரத்தில் விசாரித்து ஏன் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

 

நியாயமாகப் பார்த்தால் உயர்மட்ட அளவில் ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு அல்லது உயர்மட்ட அளவில் ஒரு பெரிய விசாரணையை நடத்தி, விபத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன, அதை யார் கண்காணித்தார்கள், அதில் என்ன பலவீனம் இருந்தது என்பதை எல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டுமே தவிர அவசர கோணத்தில் செய்வது அங்கு மக்கள் இறந்ததைப் பற்றி அரசு கவலைப்படவில்லை என்பதையே உணர்த்துகிறது. உண்மையிலேயே இறந்த மக்கள் மீது அனுதாபமோ, நல்லெண்ணமோ இருக்கும் பட்சத்தில் அதைத் தீர விசாரித்து முடிவு சொல்ல வேண்டும். இப்படி அவசர கோலத்தில் முடிவு சொல்லக்கூடாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

ராகுல் காந்தியை பிரதமராக்க முழு மூச்சுடன் பாடுபடுவோம்; காங்கிரஸ் தீர்மானம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Congress resolution that we will strive make Rahul Gandhi the Prime Minister

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது. திருச்சி  தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை பாராளுமன்ற தொகுதிதி தேர்தல் பொறுப்பாளர் பெனன்ட் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்பி கலந்து கொண்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65 ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன ஆணைக்கான கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அவர்களோடு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில், சோனியா காந்தி ஆசியோடு தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, ராகுல் காந்தியை பிரதமராக்க அயராது உழைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு அதிக இளைஞர்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு கிளைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும். கட்டமைப்பை வலுப்படுத்தினால் கட்சியும் வளரும். எனவே கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து அயராது பாடுபட வேண்டும்” என்றார்.