Skip to main content

"கடப்பாரையை வளைத்து கபாலியை அடித்த எம்.ஜி.ஆர்" - ஓட்டும் காமெடி அமைச்சர்கள்! #1 

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையோ? சோதனையோ? வேதனையோ? எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும், தென்மாவட்டங்களில் தொகுதி தோறும் சைக்கிள் பேரணி நடத்தி, அங்கங்கே சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அமைச்சர்கள் சைக்கிள் ஓட்டியதையே, இமாலய சாதனை என்று மார் தட்டினார்கள். இன்னும்கூட நிறையப் பேசினார்கள். அமைச்சர்கள் நிகழ்த்திய உரையில் ஒரு சில துளிகளை இங்கே உதிர்த்திருக்கிறோம்.

 

admk cycle rally



முதலில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி...

கடப்பாரையை வளைத்தார் எம்.ஜி.ஆர்.!

அப்போது, தலைமைக் கழகத்துக்கு எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் வரும்போது, கடப்பாரையால் எம்.ஜி.ஆர். தாக்கப்பட்டார். திமுக கருங்காலி கபாலியால். அந்தக் கடப்பாரையைப் பிடித்து, கடப்பாரையை வளைத்தவர் எம்.ஜி.ஆர். பிறகு, கபாலியை அடித்து நொறுக்கி, தலைமைக் கழகம் சென்று கட்சி நடத்தியவர் எம்.ஜி.ஆர்.

மக்கள் தலை மேல் ஏறுபவனே எம்.ஜி.ஆர். தொண்டன்!

நாங்க என்றைக்குமே, வரிசையில் நின்று சினிமா பார்த்தது கிடையாது. தியேட்டரில் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்ததே கிடையாது. பத்து, இருபது பேர் போவோம். மக்கள் எல்லாரும் வரிசையில் நிற்பாங்க. அவங்க தலை மேல ஏறி,  தவழ்ந்துக்கிட்டே போயி, கவுன்டர்ல போயி கையை நீட்டுவோம். அவன்தான் எம்.ஜி.ஆர். தொண்டன். டிக்கெட் எடுத்து உள்ள போயி படம் பார்ப்போம். புரட்சித்தலைவர் நடித்த படத்தைக் காணவந்த கலைக்கண்களுக்கு நன்றின்னு போஸ்டர் ஒட்டுவோம். இதை ஏன் சொல்லுறேன் தெரியுமா? இன்னைக்கு சைக்கிள் பேரணி தொடங்கினோம் பார்த்தீங்களா? நான் சைக்கிள்ல வந்துக்கிட்டிருக்கும்போதே, என்னுடைய நினைவுகளெல்லாம் பின்னோக்கிப் போயிருச்சு.

 

rajendra balaji



எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிள்ளை இல்லை!

எம்.ஜி.ஆர். காலத்துல அண்ணன் ராதாகிருஷ்ணன் சேர்மனுக்கு 1986-ல் போட்டியிட்டபோது, பிரச்சாரம் நிறைவு நாளன்று சைக்கிள் பேரணி. ராதாகிருஷ்ணன் ஆலமரத்துப்பட்டி வரையிலும் சைக்கிளோட போயிட்டாரு. நான் கடைசி வரைக்கும் சைக்கிள் மிதிச்சேன். நல்ல சாப்பாடெல்லாம் போட மாட்டாங்க. எங்கேயாவது புளியோதரை வச்சிருப்பாங்க. தட்டுல கொடுப்பாங்க. சாப்பிட்டுட்டு சைக்கிளை மிதிப்போம். வெறித்தனம்.. எம்.ஜி.ஆர். மீதுள்ள பற்று, பாசம். தீயசக்தியை அழிக்கணும்கிற அந்த வெறித்தனம் இன்னைக்கும் இருக்கு. அதன் வெளிப்பாடுதான் இந்த சைக்கிள் பேரணி. அதிமுக ஒண்ணும் அழியல. பணக்காரர்களை  நம்பி எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பிக்கல. அதிமுக அழியவில்லை, ஒழியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அம்மா பேரவையோட சைக்கிள் பேரணி. தலைவர் மறைந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இங்கு பிறக்கின்ற இளைஞர்களெல்லாம் எம்.ஜி.ஆர். வாழ்க, அம்மா வாழ்க என்று சொல்லி வந்துகொண்டிருக்கிறார்கள். 30 வயதுக்கு கீழ் உள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள், இளைஞர்கள், இளஞ்சிங்கங்கள் சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறார்கள்.

 

 

சில பேர் சொல்வார்கள்.. அதிமுக தொண்டர்கள், எம்.ஜி.ஆர். பக்தர்கள் எல்லாரும் இறந்துவிட்டார்கள். இந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டதென்று. இல்லியே? இங்கே அமர்ந்திருக்கின்ற, சைக்கிள் பேரணியில் வந்த இளைஞர்களெல்லாம், எம்.ஜி.ஆரை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர் நடித்த படத்தைப் பார்த்திருப்பார்கள். எம்.ஜி.ஆருக்கும் பிள்ளை இல்லை. ஜெயலலிதாவுக்கும் பிள்ளை இல்லை. தொல்லை இல்லை. கருணாநிதிக்கு பிள்ளை உண்டு. தொல்லை உண்டு. கருணாநிதி செத்ததுக்கு திமுககாரன் யாரும் கவலைப்படல. அழல.  சமாதிக்கு இடம் கொடுத்துட்டாங்களாம் கோர்ட்ல. இடம் கிடைச்சதுக்கு வெடி போடறாங்க.

 

ministers riding cycles



ஜாதகம் அதிமுகவுக்கு சாதகம்!

ஸ்டாலினோட ராசியைப் பார்த்தோமே. அவரு முதலமைச்சர் ஆகவே முடியாது.  எடப்பாடி அண்ணன் ஜாதகம் வலுவா இருக்கு. கட்டம் சரியா இருக்கு.  ராசிநாதன் வந்து வலுவா உட்கார்ந்திருக்கான். சனி உச்சத்துல இருக்கு. குரு பார்வையில இருக்கு. ஒண்ணுமே செய்ய முடியாது. எல்லாரு ஜாதகத்தையும் நாங்க பார்த்தாச்சு.

அமைச்சர்கள் சிந்திய ரத்தம்!

இன்றைக்கு சைக்கிள் பயணத்துல, ஐந்தாறு மாவட்டங்களில் தொடர்ந்து வர்றாரு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார். சைக்கிள் வந்து முன்னாடி ஓட்டும்போது தெரியாது. அப்ப சைக்கிள் மட்டும்தான் இருந்துச்சு. இப்ப எவ்வளவோ வண்டி வந்திருச்சு. டூ வீலர் வந்திருச்சு. கார் வந்திருச்சு. எவ்வளவோ சொகுசு வாழ்க்கை வந்திருச்சு. பழையபடி சைக்கிள்ல போகணும்னு ஏன் நினைச்சாருன்னா, அதிமுக தொண்டர்கள் நாங்க லட்சியவாதிகள். எதையும் சந்திக்கத் தயாராக இருப்பவர்கள். நாங்க நடந்து, பாதயாத்திரையாகக் கூட சாதனையைச் சொல்வோம். சைக்கிளில் வந்தும் சாதனையைச் சொல்வோம். எங்களுக்கு அந்த வலிமை, வல்லமை பேரவை நிர்வாகிகளுக்கு, அதிமுக தொண்டர்களுக்கு இருக்கு என்பதைக் காட்டுவதற்குத்தான் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக சைக்கிள் பேரணி நடத்துகிறோம்.

 

 


சகோதரர் ஆர்.பி. உதயகுமார் ஒரு போராளியாகத் திகழக்கூடியவர். நான் டவுணுக்குள்ளதான், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்ல அவுட்டர்ல இருந்து அவுட்டர் சைக்கிள் மிதிச்சு வந்தேன். இங்கே சிவகாசியிலும். அவர் அப்படி இல்ல. தொடர்ந்து மிதிச்சு வர்றாரு. எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஒரு அமைச்சர், அமைச்சர்களாக இருப்பவர்கள், சைக்கிள் மிதித்து வருவது அதிமுகவில் மட்டும்தான் நடக்கும். திமுககாரன் கார் கண்ணாடியைக்கூட இறக்கிவிட மாட்டான். திமுக அமைச்சர்கள் கண்ணாடியை இறக்கிவிட மாட்டாங்க. டபுள் ஏ.ஸிய போட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.  நாங்க வியர்க்க வியர்க்க, ரத்தம் சிந்தி மக்களுக்கு உழைக்க வேண்டும்; பாடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் நாங்க. 

பத்து மந்திரி பேரம்!

இப்ப எங்களோட லட்சியம் என்ன தெரியுமா? டெல்லிதான்! டெல்லில அதிமுக ஆதரவு கொடுத்த கட்சிதான், இனிமேல் ஆட்சியமைக்க முடியும். அதிமுக ஆதரவு இல்லாம, டெல்லில யாரும் ஆட்சியமைக்க முடியாது. இனி அதிமுக இப்படியெல்லாம் வெற்று ஆதரவு கொடுக்காது. மத்தியில் பத்து மந்திரி கொடுன்னு கேட்போம். சும்மா வெற்று ஆதரவு ஜெயலலிதா கொடுத்தாங்கன்னா, அவங்க வந்து பெரிய மனுஷத்தன்மையில கொடுத்தாங்க. நம்மள்லாம் அப்படி கொடுக்க முடியாது. பத்து மந்திரி கொடு. நான் வந்து விருதுநகர் மாவட்டத்துக்கு ஒரு மந்திரி கொடுன்னு கட்டாயம் கேட்பேன். நம்ம யாருக்கோ ஒட்டு போட்டு, யாருக்கோ ஆதரவு கொடுத்து, இவங்க கேட்பாங்க. கேட்கிறவங்களுக்கு நாம ஓட்டு போடணும். நீ இங்கிட்டு ஒரு காலை வைப்ப. அங்கிட்டு ஒரு காலை வைப்ப. ஒரே பேச்சு. நீ எங்கள நம்பு. உனக்கு ஆதரவு கொடுக்கிறோம். இல்ல, அவன நம்பு. முன் வாசல்ல அவன பார்க்கிற. பின் வாசல்ல எங்கள பார்க்கிற. இந்த வேலைய எல்லாம் எங்ககிட்ட வைக்காத.”

இதைப் பார்த்தே ஆச்சரியப்பட வேண்டாம். இதை விட வீரமாகப் பேசிய  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வைர வரிகள்  கீழே...  

புளியோதரை கிடைக்கவில்லையென்றாலும், புலியை எதிர்ப்போம்! - ஓட்டும் காமெடி அமைச்சர்கள்! #2

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.