Skip to main content

அமித்ஷாவின் செயலில் உள்நோக்கம் உள்ளதா?

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

தேசத்தைப் பாதுகாக்கிற அளவில் என்.ஐ.ஏ.வின் அதிரடி நடவடிக்கையாக அன்சுருல்லா என்ற தீவிரவாத அமைப்பைக் கண்டறிந்ததோடு, இலங்கை குண்டுவெடிப்பு விவகாரத்தில், இந்திய நபர்களின் தொடர்புகளைத் தோண்டித் துருவி, தமிழ்நாடு கேரளான்னு பல ரெய்டுகளை நடத்தி, கைது நடவடிக்கையை மேற்கொண்டது. இப்படி பெரியளவில் நெட்வொர்க்கோடு இயங்கினாலும், தஞ்சை மாவட்டம் திருபுவனம் பா.ம.க. பிரமுகரும் இந்துத்துவாவாதியுமான ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணையில் என்.ஐ.ஏ.வின் வேகம், நம்ம உள்ளூரு போலீஸைவிட மோசமா இருக்குன்னு சொல்றாங்க. 
 

bjp



ராமலிங்கத்தை கொலை செய்த உண்மைக் குற்றவாளிகளின் தடயத்தைக் கூட என்.ஐ.ஏ.வால் இன்னும் கண்டுபிடிக்க முடியலைன்னு டிபார்ட்மெண்ட்டில் உள்ளவங்களே சொல்றாங்க. இப்படிப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாட்டில் உள்நோக்கம் இருக்குமோங்கிற சந்தேகம் பல தரப்புக்கும் இருக்குது என்று தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்