Skip to main content

என் மனம் துண்டு துண்டாக உடைந்தது... ஜெயஸ்ரீ சம்பவம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 


 

 

bjp

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சிறுமதுரை. இந்தக் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் - ராஜி தம்பதிகளுக்கு ஜெயராஜ், ஜெயஸ்ரீ, ராஜேஸ்வரி, ஜெபராஜ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ தீயில் எரிந்த நிலையில் கடையில் கிடப்பதாகச் செல்போன் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து பதறியடித்துக் கடைக்கு ஓடி பார்த்திருக்கிறார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளதை பார்த்து கதறிய பெற்றோர், உடனடியாகத் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெயஸ்ரீ அளித்த மரண வாக்குமூலத்தில், அதே ஊரை சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அருவியின் கணவர் முருகன் மற்றும் அதிமுக கிளை கழக செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து கடைக்குள் புகுந்து தன்னை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவி ஜெயஸ்ரீ, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஜெயஸ்ரீ மரணமடைந்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிறுமி ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்த வீடியோ பதிவை பார்த்தேன். அந்த வீடியோ பதிவில் சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்க்கும்போது என்னை துண்டு துண்டாக உடைத்தது அந்த பதிவு. மேலும் அந்த வீடியோவில் தன்னை எரித்த கொலைகார கவுன்சிலரை பற்றி உறுதி அளித்து குறிப்பிட்டுள்ளார். அவள் உண்மையாக தைரியமான பெண் என்றும் கூறியுள்ளார். அதோடு ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு எனது இரங்கல் என்றும் கூறியுள்ளார்.  மேலும் சிறுமி ஜெயஸ்ரீ செய்திகளை பார்க்கும் போது மனம் உடைகிறது..நாம் உடனடி நீதியை விரும்புகிறோம். அவரை தூக்கிலிட வேண்டும், அத்தகையவர்களை மனிதர்களாகக் கூட கருத வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்