Skip to main content

ஆதாரத்தைக் கொடுங்கள்... விஞ்ஞானிகளிடம் மாட்டிக்கொண்ட மாட்டுச்சாண சிப்...

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

scientists question cow dung chip

 

ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் அறிமுகம் செய்த மாட்டுச்சாண சிப், செல்ஃபோன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்டு 600 விஞ்ஞானிகள் அவ்வமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

 

மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு பசுக்களைப் பேணுதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த அமைப்பு பசு மாட்டுச் சாணத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் `காம்தேனு தீபாவளி அபியான்' என்ற நாடு தழுவிய பிரச்சார நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி உள்ளது. இதன் தொடக்க விழாவில் செல்ஃபோன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் மாட்டுச்சாண சிப் ஒன்றை அவ்வமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிமுகப்படுத்தினார்.

 

இந்நிலையில், இந்த மாட்டுச்சாண சிப் செல்ஃபோன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்டு 600 விஞ்ஞானிகள் அவ்வமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சு எதிர்ப்புத் திறன் கொண்டது என்பது குறித்து எத்தனை பேரிடம், எங்கு, எப்போது பரிசோதனை நடத்தப்பட்டது..? இந்த சிப்பை உருவாக்கிய முதன்மை ஆய்வாளர்கள் யார்..? கண்டுபிடிப்புகள் எங்கு வெளியிடப்பட்டன? தரவு மற்றும் சோதனை விவரங்களை வழங்க முடியுமா..? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்