Skip to main content

'நடுரோட்டில் தர்ணா' பிரியங்கா காந்தி கைது - ராகுல் கண்டனம்

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுட்டில் பலியான நபர்களின் குடும்பத்தினரை பார்க்க சென்ற பிரியங்கா காந்தியை உ.பி போலிசார் கைது செய்தனர். போலிசாரின் நடவடிக்கையை எதிர்த்து ரோட்டில் அமர்ந்து பிரியங்கா காந்தி தர்ணா செய்தார். அவரின் போராட்டம் காரணமாக  காவல்துரையினர் கைது செய்தனர்.

 Priyanka Gandhi Vadra in Narayanpur on if she has been arrested

 

சில நாட்களுக்கு முன் உத்திர பிரதேச மாநிலம் சோனபத்ரா பகுதியில் இரு பிரிவுனருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கலவரம் முற்றிவிடவே  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10 பேர் பலியானர்கள். இவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல பிரியங்கா காந்தி இன்று உ.பி சென்றார். ஆனால், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற மாவட்டத்தில் போலிசார் 144 தடை உத்தரவு போட்டிருந்தனர். இதன் காரணமாக பிரியங்கா காந்தியை  அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். மேலும், திடீர் என்று போராட்டத்தில் குதித்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் பிரியங்கா சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்