Skip to main content

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநில மக்களுக்கு உதவிகள் அளிக்க விருப்பமா?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

ஒடிஷா மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஃபானி புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இதில் ஒடிஷா மாநிலத்தில் புவனேஷ்வர், பூரி உள்ளிட்ட மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் , ரயில் நிலையங்கள் , விமான நிலையங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளனர். அதே போல் ஃ பானி புயல் பூரி மாவட்டத்தில்  கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 10 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளனர்.  இது வரை புயல் காரணமாக சுமார் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ஒடிஷா மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால் உயிரிழப்பு குறைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

 

ODISHA CM RELIEF FUND ONLINE

 

 

பல்வேறு மாநில அரசுகளும் ஒடிஷா மாநில அரசை பாராட்டியுள்ளனர். ஒடிஷா மாநில மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் ஒடிஷா மாநில அரசுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக ஒடிஷா மாநிலத்தில் நடைப்பெற்று வரும் மறு சீரமைப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் சுமார் 10 கோடியை ஒடிஷா மாநில அரசுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா அரசு - ரூபாய் 10 கோடியும் , குஜராத் அரசு - ரூபாய் 5 கோடியும் , சத்தீஸ்கர் அரசு - ரூபாய் 11 கோடியும் , உத்தரப்பிரதேச அரசு - ரூபாய் 10 கோடியையும் உள்ளிட்ட மாநிலங்கள் ஒடிஷா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். இந்திய மக்கள் அனைவரும் ஒடிஷா மாநில மக்களுடன் கைக்கோர்க்க விருப்பமா ? ஒடிஷா மாநில அரசு மற்றும் ஒடிஷா மக்களுக்கு உதவிகள் ஏதேனும் அளிக்க நீங்கள் விரும்புகீற்களா ? வாருங்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உதவிகளை அளிக்கலாம்.  ஒடிஷா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நம்மால் முடிந்த வரை இணைய தளம் மூலம் நிதி உதவியை (Net Banking , Credit card , Debit card) அளிக்கலாம். இதற்கான இணைய தள முகவரி : https://cmrfodisha.gov.in/donation/onlinedonation.php ஆகும். பின்பு நிதி உதவி அளித்ததற்கான ரசீதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு வருமான வரித்துறை சட்டம் 1961 ன் படி - 80G , வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிதி உதவி அளிப்போர்கள் பான் கார்டு எண்ணை (PAN CARD NUMBER ) குறிப்பிட்டால் மட்டும் வருமான வரி விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்