Published on 15/12/2018 | Edited on 16/12/2018

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு போராட்டத்தின்போதும் ஒவ்வொரு வேடத்தில் வருவார், தெலுங்கு தேசம் கட்சியைச்சேர்ந்த எம்.பி. நரமல்லி சிவபிரசாத். கடந்த 13ம் தேதி நடந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரைப் போல் வேடமிட்டு வந்தார். இவர் அம்பேத்கர், பள்ளி மாணவர், மன்னர், ஹிட்லர், நாரதர், போன்ற வேடங்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கலைஞரைப்போல மஞ்சள் துண்டு, கறுப்பு கண்ணாடி ஆகியவற்றை அணிந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்து அனைவருக்கும் கைகாட்டிக்கொண்டே போராட்டம் .